சென்னை: இந்திய நாட்டில் விற்பனை செய்யப்படும் மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களில் டைப்-சி சார்ஜிங் போர்ட் அவசியம் இருக்க வேண்டும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. உற்பத்தியாளர்கள் இதனை உறுதி செய்வதற்கான காலக்கெடு வரும் மார்ச், 2025 வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மொபைல் போன் தவிர்த்து கீபோர்டு போன்கள் மற்றும் ஹெட்செட் போன்ற சாதனங்களுக்கு இதில் விலக்கு இருக்கும் என அண்மையத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஒரே வகையிலான, நிலையான டைப்-சி சார்ஜிங் போர்ட் வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு வகையான சார்ஜிங் போர்ட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டில் விற்பனை செய்யப்படும் மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களில் டைப்-சி சார்ஜிங் போர்ட் அவசியம் இருக்க வேண்டும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. உற்பத்தியாளர்கள் இதனை உறுதி செய்வதற்கான காலக்கெடு வரும் மார்ச், 2025 வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மொபைல் போன் தவிர்த்து கீபோர்டு போன்கள் மற்றும் ஹெட்செட் போன்ற சாதனங்களுக்கு இதில் விலக்கு இருக்கும் என அண்மைய தகவல்கள் கிடைத்துள்ளது.
செய்திப்பிரிவு