புதுடெல்லி: பானி பூரியை விரும்பி வாங்கி சாப்பிடும் உணவு பிரியர்களுக்கு அதனை சுகாதாரமான முறையில் வழங்க வேண்டுமென்ற நோக்கில் அந்தத் தொழிலில் களம் இறங்கியுள்ளார் 21 வயதான பி.டெக் பட்டதாரி டாப்சி உபாத்யா. பானி பூரி விற்பனை மேற்கொள்ளும் இந்த இளம் பட்டதாரியின் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
வாகனங்கள் பரபரக்கும் டெல்லி நகர சாலைகளின் ஓரத்தில் இயங்கி வரும் லட்சக்கணக்கான பானி பூரி கடைகளில் ஒன்றுதான் டாப்சி நடத்தி வரும் பானி பூரி கடை. அவரது வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் தனது முயற்சி குறித்து அவர் விளக்குகிறார். அந்த வீடியோவின் துவக்கமே புல்லட் வண்டியை அவர் கெத்தாக ஓட்டி வரும் காட்சியுடன் தொடங்குகிறது. அதன் பின்புறம் பானி பூரி கடைக்கான சிறிய அளவிலான தள்ளுவண்டி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.
பானி பூரியை விரும்பி வாங்கி சாப்பிடும் உணவு பிரியர்களுக்கு அதனை சுகாதாரமான முறையில் வழங்க வேண்டுமென்ற நோக்கில் அந்த தொழிலில் களம் இறங்கியுள்ளார் 21 வயதான பி.டெக் பட்டதாரி டாப்சி உபாத்யா. பானி பூரி விற்பனை மேற்கொள்ளும் இந்த இளம் பட்டதாரியின் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
Authour: செய்திப்பிரிவு