Advertisement
புதுடெல்லி: நேபாள அதிபர் ராம்சந்திர பவ்டெல் மருத்துவ சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேபாள அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற ராம்சந்திர பவ்டெலுக்கு இம்மாத தொடக்கத்தில் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து, காத்மாண்டுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏப்ரல் 1ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில், நேற்று மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, காத்மாண்டுவில் உள்ள டியு பயிற்சி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நெஞ்சுப் பகுதியில் தொற்று ஏற்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.
நேபாள அதிபர் ராம்சந்திர பவ்டெல் மருத்துவ சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement