புதுடெல்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி கடந்த ஆகஸ்ட் 9, 2020 முதல் டிசம்பர் 11, 2021 வரை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். டெல்லியின் எல்லைகளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் மத்திய அரசு அந்த 3 சட்டங்களை வாபஸ் பெற்றது. அப்போது, மத்திய அரசால் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை எனப் புகார் உள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நேற்று கூடியது.
இதற்கான ஏற்பாடுகளை சம்யுக்த கிஸான் மோர்ச்சா (எஸ்கேஎம்) செய்திருந்தது. இதில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்தும் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின ஒருங்கிணைப்பு குழு சார்பில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி கடந்த ஆகஸ்ட் 9, 2020 முதல் டிசம்பர் 11, 2021 வரை விவசாயிகள் போராட்டம் நடத்தினர். டெல்லியின் எல்லைகளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் மத்திய அரசு அந்த 3 சட்டங்களை வாபஸ் பெற்றது.
Author: ஆர்.ஷபிமுன்னா