Advertisement
சென்னை: டி.எம்.சௌந்தரராஜன் சாலை என்ற பெயர் பலகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் இன்று திறந்து வைக்க உள்ளார். மந்தைவெளி மேற்கு வட்டச் சாலை டிஎம்.சௌந்தரராஜன் சாலை என மாற்றப்பட்டதையடுத்து பெயர் பலகை திறக்கப்படுகிறது. டி.எம்.சௌந்தரராஜனின் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் இன்று மாலை இன்னிசை கச்சேரி நடக்கிறது. சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 5 மணிக்கு நடக்கும் கச்சேரியில் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
Advertisement