கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் பயன்பாட்டில் உள்ள டிராம் போக்குவரத்து சேவை 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தச் சூழலில் டிராம் சேவை கடந்து வந்த பாதையை பார்ப்போம். கொல்கத்தா மற்றும் இந்தியாவின் தனித்துவமிக்க அடையாளங்களில் ஒன்றாக இந்த டிராம் சேவை திகழ்கிறது.
சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்னதாக இதே நாளில் (பிப்.24) கடந்த 1873-ல் டிராம் சேவை கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இதனை நிறுவி இருந்தனர். சுலபமான போக்குவரத்துக்காக கொண்டுவரப்பட்ட சேவை இது. செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகள் என அனைத்து தரப்பு மக்களுக்குமான போக்குவரத்து சேவையாக இது இருந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் பயன்பாட்டில் உள்ள ட்ராம் போக்குவரத்து சேவை 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த சூழலில் ட்ராம் சேவை கடந்து வந்த பாதையை பார்ப்போம். கொல்கத்தா மற்றும் இந்தியாவின் தனித்துவமிக்க அடையாளங்களில் ஒன்றாக இந்த ட்ராம் சேவை திகழ்கிறது.
Authour: செய்திப்பிரிவு