சென்னை: தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறையில் குழந்தைகளுக்கான தடுப்பூசிசான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை, சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் அமல்படுத்தப்பட உள்ளது.
தேசிய தடுப்பூசி அட்டவணையின்கீழ் குழந்தைகளுக்கு மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்சா தொற்று, கல்லீரல் தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக் காய்ச்சல், விட்டமின்-ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் டிஜிட்டல் முறையில் குழந்தைகளுக்கான தடுப்பூசிசான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை, சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் அமல்படுத்தப்பட உள்ளது.
Author: செய்திப்பிரிவு