சென்னை: நில அளவர் மற்றும் குரூப்-4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தில் படித்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும்போட்டித் தேர்வு மூலம் நிரப்பப் பட்டு வருகின்றன.
அந்தவகையில், நில அளவர்,வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் 1,089 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் பிப்ரவரி 15-ம் தேதி வெளியாகின. தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
நில அளவர்,வரைவாளர் உள்ளிட்ட பணிகளில் 1,089 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த நவம்பர் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் பிப்ரவரி 15-ம் தேதி வெளியாகின.
Author: செய்திப்பிரிவு