அதானி குழு விவகாரம் தொடர்பாக கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் நாடாளுமன்றத்தில் இருந்து டெல்லி விஜய் சவுக் வரை மூவர்ண கொடிகளை ஏந்திபேரணி நடத்தினர். இதில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
ஜனநாயக கொள்கைகளைப் பற்றி பிரதமர் மோடி தலைமை யிலான பாஜக அரசு நிறையபேசுகிறது. ஆனால், அவர்கள்சொல்வது போல் செயல்படவில்லை. அதானி குழும முறைகேடுகள் குறித்து கூட்டுக் குழு விசாரணை கோருகிறோம். கூட்டுக் குழு அமைக்க பாஜக ஏன் பயப்படுகிறது. அதை திசை திருப்ப பாஜக உறுப்பினர்களே நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் இடையூறு செய்கின்றனர்.
அதானி குழு விவகாரம் தொடர்பாக கூட்டுக் குழு விசாரணை கோரி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர் நாடாளுமன்றத்தில் இருந்து டெல்லி விஜய் சவுக் வரை மூவர்ண கொடிகளை ஏந்திபேரணி நடத்தினர். இதில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.
Author: செய்திப்பிரிவு