சேலம்: நாட்டின் முக்கிய நகரங்களை இணக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் வரும் ஏப்.8-ம் தேதி பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்படவுள்ள நிலையில், இன்று கோவையில் இருந்து சேலம் வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவேக வந்தே பாரத் விரைவு ரயில்களை மத்திய அரசு அறிமுகம் செய்து வருகிறது. ஏற்கெனவே 10 வந்தே பாரத் விரைவு ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில் 11-வது வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, சென்னையில் இருந்து கோவை வரை இயங்க கூடிய வந்தே பாரத் விரைவு ரயிலை வரும் ஏப்.8-ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
நாட்டின் முக்கிய நகரங்களை இணக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் வரும் ஏப்.,8ம் தேதி பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்படவுள்ள நிலையில், இன்று கோவையில் இருந்து சேலம் வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது.
Author: வி.சீனிவாசன்