சேலம்: சேலம் அருகே மூன்றாவது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவர் ஒருவர், தோல்வி பயத்தால் தனியார் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் நீட் தேர்வு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இதில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் முருகன் என்பவரது மகன் சந்துரு (19) தங்கி நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்த நிலையில் நேற்று மாணவன் சந்துரு பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த ஆத்தூர் போலீஸார் சந்துருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம் அருகே மூன்றாவது முறையாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன், தோல்வி பயத்தால் தனியார் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Author: வி.சீனிவாசன்