கோவை: சேலம் கோட்டத்தில் அதிகபட்ச வருவாயை ஈட்டித்தந்தும், கோவை ரயில் நிலையம் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. கோவையை கோட்ட தலைமையகமாக மாற்றுவதே இதற்கு தீர்வாக அமையும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.
முதல்தர (ஏ1) ரயில் நிலையமாக உள்ள கோவை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் சுமார் 35 ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றன. வேறு ரயில்நிலையங்களில் இருந்து புறப்பட்டு வரும் 94 ரயில்கள், நின்று செல்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் சுமார் ஒரு கோடி பயணிகள் இந்த ரயில்நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர்.
சேலம் கோட்டத்தில் அதிகபட்ச வருவாயை ஈட்டித்தந்தும், கோவை ரயில் நிலையம் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. கோவையை கோட்ட தலைமையகமாக மாற்றுவதே இதற்கு தீர்வாக அமையும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.
Author: செய்திப்பிரிவு