சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த 10-ம் தேதி முதல் பகல் நேர அதிகபட்ச வெப்பம் தொடர்ந்து 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் கூடுதலாக பதிவாகி வரும் நிலையில், நேற்று 105.1 டிகிரி என வெயில் சுட்டெரித்ததால், மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.
கோடை காலம் தொடங்கியதில் இருந்தே, சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக, கடந்த 10-ம் தேதி தொடங்கி, நேற்று வரையிலும் பகல் நேர அதிகபட்ச வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் இருந்து வருகிறது. கடந்த 13-ம் தேதி அதிகபட்சமாக 105.5 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவானது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 10-ம் தேதி முதல் பகல் நேர அதிகபட்ச வெப்பம் தொடர்ந்து 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் கூடுதலாக பதிவாகி வரும் நிலையில், நேற்று 105.1 டிகிரி என வெயில் சுட்டெரித்ததால், மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்
Author: செய்திப்பிரிவு