Advertisement
தாம்பரம்: சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு விநியோகிக்க ரூ.535 கோடி கரன்சிகளை எடுத்துக் கொண்டு 2 கன்டெய்னர் வாகனங்கள் நேற்று மதியம் புறப்பட்டன. ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில்துப்பாக்கி ஏந்திய 17 போலீஸாரும் பாதுகாப்புக்காக இந்த வாகனங்களுடன் சென்றனர்.
இந்நிலையில், மதியம் 2.30 மணிக்கு தாம்பரம் சானடோரியம் சித்த மருத்துவமனை அருகேசென்றபோது, இதில் ஒரு கன்டெய்னர் வாகனத்தில் இருந்துதிடீரென அதிக அளவு புகைவெளியேறியது. வேகம் குறைந்து, ஒருகட்டத்தில் அந்த வாகனம் நின்றுவிட்டது.
சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து விழுப்புரத்தில் உள்ள வங்கிகளுக்கு விநியோகிக்க ரூ.535 கோடி கரன்சிகளை எடுத்துக் கொண்டு 2 கன்டெய்னர் வாகனங்கள் நேற்று மதியம் புறப்பட்டன.
Author: செய்திப்பிரிவு
Advertisement