சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 74 நிலையங்களில் கூடுதலாக மேம்படுத்தப்பட்ட 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் விரைவில் நிறுவப்படவுள்ளன. இந்த தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில் க்யூஆர் குறியீடு,யுபிஐ செயலியைப் பயன்படுத்தி முன்பதி வில்லாத ரயில் டிக்கெட்டை எளிதாகப் பெறலாம்.
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டை பெற, டிக்கெட் கவுன்ட்டரில் நெடுநேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் பெறும் வகையில், தெற்கு ரயில்வேயில் யுடிஎஸ் மொபைல் செயலி கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை புறநகர் மின்சார ரயில்களில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுத்து பயணிக்க வசதியாக, யுடிஎஸ் மொபைல் செயலி தொடங்கப்பட்டது. இச்செயலி தற்போது நாடு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் 74 நிலையங்களில் கூடுதலாக மேம்படுத்தப்பட்ட 96 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் விரைவில் நிறுவப்படவுள்ளன. இந்த தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களில்
Author: செய்திப்பிரிவு