சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்தில், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகின்றன. இந்தத் திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை (3-வது வழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்ட திட்டத்தில், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்திற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
Author: கண்ணன் ஜீவானந்தம்