சென்னை: வருகின்ற ஏப்ரல் 19, 2023 முதல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பயண அட்டைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல்: பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருகின்ற ஏப்ரல் 19, 2023 முதல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் செலுத்துவதற்கு பதிலாக மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஏப்ரல் 19, 2023 முதல், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பயண அட்டைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக தெரிவித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு