சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.334 கோடி நிதி பற்றாக்குறை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடனுக்கான வட்டியாக மட்டும் ரூ.148 கோடி செலுத்தப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் 2023 – 2024 ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் 2023-2024-ம் நிதியாண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூ.4,131.70 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4466.29 கோடியாகவும், மூலதன வரவு ரூ.3554.50 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.3554.50 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சி ரூ.334 கோடி நிதி பற்றாக்குறையில் இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.334 கோடி நிதி பற்றாக்குறை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Author: கண்ணன் ஜீவானந்தம்