சென்னை: சென்னை, புறநகரில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.320 கோடிக்கான பணிகளை ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வரும் மழைக் காலங்களில் தண்ணீர் நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 25) ஆய்வுக் கூட்டம் நடைற்றது. இதில் கூடுதல் தலைமைச் செயலாளர்கன், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் 15 மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், தலைமைப் பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை, புறநகரில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.320 கோடிக்கான பணிகளை ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.
Author: செய்திப்பிரிவு