சென்னை: சென்னையில் நடந்த கண்காட்சியில் மதுரை மத்திய சிறைக் கைதிகள் தயாரித்த சுங்குடி சேலைகள் அதிகளவில் விற்கப்பட்டன. மேலும், ஒட்டுமொத்த சிறை கைதிகளின் பொருட்கள் விற்பனை மூலம் சிறந்த அரங்கிற்கான 3-வது பரிசு தமிழக சிறை நிர்வாகத்திற்கு கிடைத்துள்ளது.
சென்னை தீவுத்திடலில் இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம், தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் கண்காட்சி நடந்தது. அரசு சார்பில் சுமார் 53 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. தமிழக சிறைத் துறை அரங்கில் சிறைகள், சீர்திருத்த பணிகள் துறை இயக்குநர் அமரேஷ் பூஜாரியின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் இருந்து 10 மத்திய சிறைகளில் கைதிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சந்தைப்படுத்தும் விதமாக அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
சென்னையில் நடந்த கண்காட்சியில் மதுரை மத்திய சிறை கைதிகள் தயாரித்த சுங்குடி சேலைகள் அதிகளவில் விற்கப்பட்டன.
Authour: என். சன்னாசி