சென்னை: சென்னையில் பழுதடைந்த சிறிய கழிவுநீர் குழாய்களை மாற்றி உந்து நிலையங்களை அமைக்க அந்தந்த பகுதிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தி.நகர் தொகுதியில் அழகிரி நகர் பகுதியில் கழிவுநீர் உந்து நிலையம், பழையகழிவுநீர் பாதைகளைச் சீரமைத்தல் வேண்டும். தொகுதி முழுவதும் பரவலாக கழிவுநீர் அடைப்பு உள்ளது.மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் அதற்கு ஏற்ப குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொகுதி எம்எல்ஏ ஜெ.கருணாநிதி தெரிவித்தார்.
சென்னையில் பழுதடைந்த சிறிய கழிவுநீர் குழாய்களை மாற்றி உந்து நிலையங்களை அமைக்க அந்தந்த பகுதிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு