செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ரூ.119.21 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படாதது குறித்துமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2019 நவம்பர், 29-ம் தேதி தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கை மாவட்டம் உதயமானது. மாவட்ட நிர்வாகத்துக்கு புதிய ஆட்சியர் அலுவலகம் கட்ட, ரூ.119.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டு வேன்பாக்கத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. 27,062 ச.மீ. பரப்பில், தரை மற்றும் 4 தளங்களுடன் ஆட்சியர் அலுவலகமும் கட்டி முடிக்கப்பட்டது. ஆனாலும், திறக்கப்படவில்லை.
செங்கல்பட்டில் ரூ.119.21 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்படாதது குறித்துமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Author: பெ.ஜேம்ஸ்குமார்