கண்ணூர்: சூடான் தலைநகர் கர்த்தூமில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவின் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இவர், மே மாதம் சொந்த ஊர் திரும்ப இருந்த நிலையில், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவ ஆல்பர்ட் அகஸ்டீன் சூடானில் உள்ள டால் குரூப் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் தனது மனைவி மற்றும் மகளை ஈஸ்டர் கொண்டாட்டத்துக்காக சூடான் அழைத்திருந்தார். மீண்டும் அவர்களுடன் மே 3-ம் தேதி இந்தியா திரும்ப திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை (ஏப்.15) அகஸ்டின் தனது ஃப்ளாட்டின் ஜன்னலோரமாக நின்று இங்கிலாந்தில் இருக்கும் தனது மகனுடன் போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திசைமாறி வந்த துப்பாக்கித் தோட்டா ஒன்று அவரைத் தாக்கி காயப்படுத்தியதில் அவர் உயிரிழந்தார் என்று அகஸ்டினின் தந்தை தெரிவித்துள்ளார்.
சூடான் தலைநகர் கார்த்தும் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்தியாவின் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர், மே மாதம் சொந்த ஊர் திரும்ப இருந்த நிலையில் இந்த துயரச் சம்பவம் நிகழந்துள்ளது.
Author: செய்திப்பிரிவு