மதுரை: மதுரையில் வாகனங்களால் பெருகியதை அடுத்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக போலீஸ் காவலர் ஒருவர் சைக்கிளுக்கு மாறியுள்ளார்.
மதுரையில் நாளுக்கு, நாள் புதிய வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் 100-க்கும் மேற்பட்ட புதிய இரு சக்கர வாகனங்களும், 50-க்கும் மேலான நான்கு சக்கர வாகனங்களும் 4 வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பதிவெண்களை பெறுகின்றன. வாகன பெருக்கத்தால் மதுரை மாநகர சாலைகளில் தினந்தோறும் வாகனங்கள் திக்குமுக்காடுகின்றன. மெயின் ரோடுகள், உட்பட பிற ரோடுகளிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் வாகன நெருக்கடி என்பது அன்றாடம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.
மதுரையில் வாகனங்களால் பெருகியதைஅடுத்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இடையூறுகளைத் தவிர்ப்பதற்காக போலீஸாகாரர் ஒருவர் சைக்கிளுக்கு மாறியுள்ளார்.
Authour: என்.சன்னாசி