Advertisement
அக்டோபர் 25-ம் தேதி மாலை 5.40.
2 வயதுக் குழந்தை சுஜித் திருச்சி, நடுக்காட்டுப் பட்டியில் உள்ள வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். மழையால் அங்கு மூடப்படாமல் விட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் மண் உள்வாங்க, அதற்குள் தவறி விழுந்தான். சுஜித்தை மீட்க மதுரை, திருச்சி, கோவை மீட்புக் குழுக்கள், தீயணைப்புத் துறை, மாநிலப் பேரிடர் மீட்புத்துறை, தேசியப் பேரிடர் மீட்புத்துறை, ஓஎன்ஜிசி மற்றும் என்எல்சி இயந்திரங்கள் மீட்க முயன்றன.
சுஜித் தொடர்பான செய்தி கிடைத்தபோது சாமானியர்களின் மனநிலையில்தான் நாங்களும் இருந்தோம். 2 வயதுக் குழந்தை என்பது அதிகப் பதற்றத்தை ஏற்படுத்தியது.
க.சே.ரமணி பிரபா தேவி
Advertisement