கோவை: சீர்காழி – ஆழ்வார் திருநகரியில் கிடைத்துள்ள செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் குறித்து தமிழக ஆன்மிக மரபை நன்கறிந்த தொல்லியல் அறிஞர்களை கொண்டு ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு வானதி சீனிவாசன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "சீர்காழி சட்டநாதர் கோயில் சீரமைப்புப் பணியின்போது, பூமிக்கடியில் இருந்து பஞ்சலோக சுவாமி சிலைகளும், செப்பேடுகளும் கிடைத்துள்ளன. இந்தச் செப்பேடுகளில் தமிழ் மொழியின் பொக்கிஷங்களில் ஒன்றான தேவாரப் பதிகங்கள் எழுதப்பட்டிருப்பது உலகெங்கும் வாழும் தமிழர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சீர்காழி, ஆழ்வார் திருநகரியில் கிடைத்துள்ள செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் குறித்து தமிழக ஆன்மிக மரபை நன்கறிந்த தொல்லியல் அறிஞர்களை கொண்டு ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு வானதி சீனிவாசன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்
Author: க.சக்திவேல்