பெய்ஜிங்: மூன்று நாள் பயணமாக வரும் திங்கள்கிழமை ரஷ்யா செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியதன் ஓராண்டு நிறைவை ஒட்டி சீன அரசு தரப்பில் கடந்த மாதம் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், முழுமையான போர் நிறுத்தத்தை அமல்படுத்த இரு தரப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அனைத்து நாடுகளின் இறையாண்மையும் மதிக்கப்பட வேண்டும் என்பதை சீனா ஆதரிக்கிறது என்பதாக ஒரு நிலைப்பாட்டையும், ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மேற்கத்திய நாடுகள் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்பதாக ஒரு நிலைப்பாட்டையும் அந்த அறிக்கையில் சீனா வெளிப்படுத்தி இருந்தது.
மூன்று நாள் பயணமாக வரும் திங்கள்கிழமை ரஷ்யா செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் விளாதிமிர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
Author: செய்திப்பிரிவு