தைபே: தைவான் கடல் பகுதியில் சீன கடற்படை அண்மையில் போர் ஒத்திகையை நடத்தியது. இதைத் தொடர்ந்து சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் தைவான் கடல் பகுதியில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிலியஸ் போர்க்கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டது.
சீனாவில் கடந்த 1911-ல் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, சீன தேசிய கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த 1927-ம் ஆண்டில் ஆளும் கட்சிக்கு எதிராக, சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி உயர்த்தியது. இதன் காரணமாக 1949-ம் ஆண்டு வரை சீனாவில் உள்நாட்டுப் போர் நீடித்தது. இந்த போரில் தோல்வியை தழுவிய சீன தேசிய கட்சியினர், தென் சீன கடலில் 168 தீவுகள் அடங்கிய தைவானில் குடியேறினர். அந்த பகுதியை சீனா தற்போது சொந்தம் கொண்டாடி வருகிறது.
தைவான் கடல் பகுதியில் சீன கடற்படை அண்மையில் போர் ஒத்திகையை நடத்தியது. இதைத் தொடர்ந்து சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் தைவான் கடல் பகுதியில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் மிலியஸ் போர்க்கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டது.
Author: செய்திப்பிரிவு