சிவகங்கை: தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கருப்பு கவுனி அரிசி, கிமு 2500-ம் ஆண்டுகளிலேயே இருந்துள்ளது. முதலில் இதை தடை செய்யப்பட்ட அரிசி (பார்பிடன் ரைஸ்) என்றே அழைத்தனர். சீனாவில் சாதாரண மக்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு மன்னர் குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
கிபி 1800-ம் ஆண்டுகளில் சீனர்கள் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தத் தொடங்கினர். தற்போது ஜப்பான் நாட்டில் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் இந்த அரிசி இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பண்டையக் காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கருப்பு கவுனி அரிசி, கிமு 2500-ம் ஆண்டுகளிலேயே இருந்துள்ளது. முதலில் இதை தடை செய்யப்பட்ட அரிசி (பார்பிடன் ரைஸ்) என்றே அழைத்தனர்.
Author: இ.ஜெகநாதன்