சென்னை: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறது ஓடிடி தளங்கள். திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், ஆவணப்படங்கள், மெகா சீரியல்கள், நேரலை விளையாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்புகிறது ஓடிடி சேவை வழங்கும் நிறுவனங்கள். இந்தியாவில் இந்த சேவையை வழங்கும் முதன்மையான நிறுவனங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமும் ஒன்று.
குறிப்பாக கிரிக்கெட் போட்டிகள் நேரலையில் ஸ்ட்ரீம் செய்யும் தளம் என்பதால் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம். அது தவிர ஸ்டார் நெட்வொர்க் கன்டென்ட்கள் இதில் அதிகம் கிடைக்கும். இந்திய அணி கிரிக்கெட் விளையாடினால் நிகழ்நேரத்தில் பல மில்லியன் பார்வைகளை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் பெறும். அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பலரும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்வார்கள்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறது ஓடிடி தளங்கள். திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், ஆவணப்படங்கள், மெகா சீரியல்கள், நேரலை விளையாட்டு நிகழ்வுகளை ஒளிபரப்புகிறது ஓடிடி சேவை வழங்கும் நிறுவனங்கள். இந்தியாவில் இந்த சேவையை வழங்கும் முதன்மையான நிறுவனங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமும் ஒன்று.
செய்திப்பிரிவு