புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் பட்டியலில் அரசியல்வாதியாகவும் பிரபல தாதாகவும் முதலிடத்தில் இருந்தவர் அத்தீக் அகமது. முன்னாள் எம்.பி.யான அத்தீக், 5 முறை எம்எல்ஏ.வாகவும் இருந்தவர். நிலமோசடி, ஆள்கடத்தல், கொலை என அத்தீக் மீது 44 ஆண்டுகளாக 103 வழக்குகள் பதிவாகி விசாரணை நடைபெற்று வந்தன.
அவற்றில், அலகாபாத்தின் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் என்பவரை 2005-ல் சுட்டுக் கொன்ற வழக்கு மிகவும் முக்கியமானது. இந்த வழக்கில் அத்தீக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். இந்த வழக்கில் இருவருக்கும் சமீபத்தில் உ.பி. நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
உத்தர பிரதேச மாநிலத்தில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் பட்டியலில் அரசியல்வாதியாகவும் பிரபல தாதாகவும் முதலிடத்தில் இருந்தவர் அத்தீக் அகமது. முன்னாள் எம்.பி.யான அத்தீக், 5 முறை எம்எல்ஏ.வாகவும் இருந்தவர்.
Author: ஆர்.ஷபிமுன்னா