சென்னை: குறு, சிறு நடுத்தரத் தொழில்கள்துறை சார்பில், மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்டுள்ள ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் மற்றும் ரூ.15 கோடியில் கட்டப்பட்டபுதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தனித்துவம் வாய்ந்த பல பொருட்கள் ஒவ்வொருமாவட்டத்திலும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை உலக அளவில்சந்தைப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘மாவட்ட ஏற்றுமதி மையங்கள்’ உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
குறு, சிறு நடுத்தரத் தொழில்கள்துறை சார்பில், மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்டுள்ள ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் மற்றும் ரூ.15 கோடியில் கட்டப்பட்டபுதிய கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
Author: செய்திப்பிரிவு