"நான் பள்ளிக்குச் சென்றுவிடுவேன் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு நாளும் எழுகிறேன். தலிபான்கள் பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்று கூறுகிறார்கள்; ஆனால் இரண்டு வருடங்களாக பள்ளிக்கூடம் திறக்கவில்லை. நாங்கள் இனியும் அவர்களை நம்பபோவதில்லை. இந்த நிலை என் இதயத்தை உடைக்கிறது. எங்களுக்கு முன்னராவது சிறிய சுதந்திரம் இருந்தது, தற்போது அதுவும் பறிக்கப்பட்டுவிட்டது” என்கிறார் 17 வயதான ஹபிபா.
ஹபிபா உட்பட ஆப்கானைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறுமிகள், தலிபான்களின் முடிவால் பள்ளிக்கூடம் செல்ல முடியாமல் வீட்டிலே அடைப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அவர்கள் அறிவித்தனர். எனினும், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது என்றும், பெண் கல்வி; பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அவர்களின் அறிவிப்புக்கு மாறாக தலிபான் நிர்வாகம், ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்வது தடை விதித்தது. பல்கலைகழங்களிலும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நான் பள்ளிக்கு சென்றுவிடுவேன் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு நாளும் எழுந்திருக்கிறேன். தலிபன்கள் பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்று கூறுகிறார்கள் ஆனால் இரண்டு வருடங்களாக பள்ளிக்கூடம் திறக்கவில்லை.
Author: செய்திப்பிரிவு