ஆதிகாலம் முதல் இன்றைய நவீனக் காலம் வரை உலகெங்கும் உள்ள பல கலாச்சாரங்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாகச் சிறுதானியங்கள் இருந்து வருகின்றன. சிறுதானியங்கள், ஆரோக்கியத்தின் ஊற்று; நமது பாரம்பரிய உணவு முறைகள் நமக்கு வழங்கியிருக்கும் நலக் கவசம். சிறுதானியங்களில் நம்பமுடியாத அளவுக்கு நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுக்களும் புரதங்களும் ஊட்டச்சத்துக்களும் நிரம்பி உள்ளன.
இருப்பினும், காலவோட்டத்தில் நம் முன்னோர்களின் பிரதான உணவாக இருந்த சிறுதானியங்கள் சற்றே பின்தங்கிவிட்டன. இந்த நிலையை மாற்றியமைத்து, சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில் 2023 சர்வதேச ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது.
இன்றைய நவ நாகரிக உணவு வகைகளை சிறுதானியங்களைக் கொண்டு ராகேஷ் உருவாக்கியிருந்தார். சிறுதானியங்கள் கொண்டு சமைக்கப்பட்டிருந்த சூப், சாலட், பிரியாணி, பாயசம், இனிப்புகள் போன்றவை இன்ப அதிர்ச்சி அளித்தன; வயிற்றையும் மனத்தையும் நிரப்பின.
Authour: நிஷா