சென்னை: சிந்து சமவெளி பண்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழுக்கே உள்ளது என்பதை ஆய்வுகள் கூறுகின்றன என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில் ஒடிசா மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழியல் இந்தியவியல் ஆய்வாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது.
சிந்து சமவெளி பண்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழுக்கே உள்ளது என்பதை ஆய்வுகள் கூறுகின்றன என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
Author: செய்திப்பிரிவு