புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு குறித்து புனைக் கதை எழுத்தாளர் ஆர்த்தர் கிளார்க் 59 ஆண்டுக்கு முன்பே பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் இப்போது பேசு பொருளாகி உள்ளது. இது மனிதனைப் போலவே சில பணிகளை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஓட்டலில் உணவு வழங்கும் சேவை செய்வது முதல் மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சை செய்வது வரையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ரோபோக்கள் வந்துவிட்டன. இந்த தொழில்நுட்பம் குறித்து புனைக்கதை எழுத்தாளர் ஆர்த்தர் கிளார்க் 59 ஆண்டுகளுக்கு முன்பே கணித்துக் கூறியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
செயற்கை நுண்ணறிவு குறித்து புனைக் கதை எழுத்தாளர் ஆர்த்தர் கிளார்க் 59 ஆண்டுக்கு முன்பே பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
Author: செய்திப்பிரிவு