சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் புதிதாக பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள், நீர்நிலைகள், மீன் சந்தை, இறைச்சிக் கூடம், பள்ளிக் கட்டடங்கள் அமைக்க ரூ. 24.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை 2.0 திட்டத்தில் சென்னை மாநகராட்சியில் புதிதாக 8 பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள், நீர்நிலை மேம்பாட்டுப் பணி, மீன் சந்தை அமைத்தல், இறைச்சிக் கூடம் நவீன மயமாக்குதல், 3 பள்ளிக்கட்டடங்கள் என மொத்தம் 14 திட்டப்பணிகளுக்கு ரூ.23 கோடி நிதி, சென்னை மாநகராட்சி பங்களிப்பு நிதி ரூ.1.34 கோடி என மொத்தம் ரூ.24.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் புதிதாக பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள், நீர்நிலைகள், மீன் சந்தை, இறைச்சிக் கூடம், பள்ளிக் கட்டடங்கள் அமைக்க ரூ. 24.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு