பள்ளிக்கு வரும்போது சீருடை அவசியம் என்பது உலகம் முழுவதுமே கடைப்பிடிக்கப்படும் பழக்கம். ஆனால், மாணவரின் சிகை அலங்காரம் எப்படியிருக்க வேண்டும் என்பது வரை ஒரு பள்ளி நிர்வாகத்தின் கட்டுப்பாடு நீளும் என்றால் அது விவாதப் பொருளாவது இயல்பு. இப்படியொரு கட்டுப்பட்டால் ஜப்பான் பள்ளிகள் விவாதப் பொருளாகியுள்ளன. நம்மூரிலும் கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் புள்ளிங்கோ ஹேர்ஸ்டைல் என்று முத்திரை குத்தி கட்டாயமாக முடி திருத்தம் செய்யப்பட்ட சம்பவங்கள் உண்டு. அது விவாதப் பொருளாகி கருத்துகள் காரசாரமாக பகிரப்பட்டதும் நினைவில் இருக்கலாம். இப்போது ஜப்பான் சம்பவத்திற்கு வருவோம்.
ஜப்பானின் ஹிமேஜி நகரில் உள்ள ஒரு பள்ளியில் அண்மையில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் பதின்ம வயது சிறுவன் ஒருவர் பட்டம் பெறவிருந்தார். ஆப்பிரிக்க அமெரிக்க தந்தைக்கு, ஜப்பானிய தாய்க்கும் பிறந்த அவர் அன்றைய நாளை வெகு ஆவலாக எதிர்நோக்கியிருந்துள்ளார். இயல்பாகவே தந்தைவழி தாக்கத்தால் அவரது தலைமுடி சுருள் முடியாக இருக்கிறது. அதனால் அவர் பட்டமளிப்பு விழாவிற்கு தன்னைத் தயார்படுத்தும்போது தலைமுடியை வாரி அதனை சிறு சடைகளாகக் கட்டியுள்ளார். (இதனை கார்ன்ரோ ப்ரெய்டிங் எனக் கூறுகின்றனர்) பின்னர் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
மாணவர்கள் விரும்பினால் குதிரை வால் போட்டுக் கொள்ளலாம். மாணவிகள் விரும்பினால் தங்கள் முடியை ஒட்ட வெட்டிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. சிகை அலங்காரத்தால் பட்டமளிப்பு விழா கனவை தொலைத்த சிறுவனுக்கு நேர்ந்த அவலம் மனதை வாட்டினாலும் இது போன்ற சில அறிவிப்புகள் மாற்றம் தூரமில்லை என்ற ஆறுதலைத் தருகின்றன.
Authour: செய்திப்பிரிவு