டெல்லி: அதானி குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் குறித்த எனது கேள்விகளை திசைதிருப்பவே தகுதி நீக்கம் மற்றும் சிறைத்தண்டனை போன்ற நாடகம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக நான் கவலைப்படவே இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை, தொடர்ந்து எம்.பி.பதவி பறிப்புக்குப் பிறகு முதன் முறையாக ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், “பிரதமர் மோடிக்கும் தொழில் அதிபர் அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். எனது கேள்விகளை திசைதிருப்பவே தகுதி நீக்கம் மற்றும் சிறைத்தண்டனை போன்ற நாடகம் நடத்தப்படுகிறது.
அதானி குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் குறித்த எனது கேள்விகளை திசைதிருப்பவே தகுதி நீக்கம் மற்றும் சிறைத்தண்டனை போன்ற நாடகம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக நான் கவலைப்படவே இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்
Author: செய்திப்பிரிவு