புதுடெல்லி: மக்களவை எம்.பி. பதவியை இழந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் “நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்றார்.
இந்த பேச்சு காங்கிரஸின் கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ராகுலின் சாவர்க்கர் குறித்த பேச்சுக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினார். "சாவர்க்கரை இழிவுபடுத்துவதை எப்போதும் சகித்துக் கொள்ள மாட்டோம். சாவர்க்கர் எங்களின் கடவுள். அவரை அவமரியாதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் போராட தயாராகிக் கொண்டு இருக்கிறோம்.
மக்களவை எம்.பி. பதவியை இழந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் “நான் காந்தி, சாவர்க்கர் அல்ல, காந்திகள் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’’ என்றார்.
Author: செய்திப்பிரிவு