புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் பிரச்சினையை நீதிமன்றம் வாயிலாக அணுகாமல் சாவர்க்கர் பற்றியும் மகாபாரதம் பற்றியும் பேசுவது ஏன் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், "தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை ராகுல் காந்தி சட்டபூர்வமாகத்தான் அணுக வேண்டும். வீர் சாவர்க்கர் பற்றியும் மகாபாரதம் பற்றியும் பேசுவதை விடுத்து ராகுல் காந்தி நீதிமன்ற நடவடிக்கையை நீதிமன்றம் வாயிலாகவே அணுக வேண்டும். ஆனால், குதிரைப் பந்தயத்தில் ஓட ஒரு கழுதையை இழுக்கிறார்கள். இந்த விவகாரத்தில் காங்கிரஸார் சுய பரிசோதனை செய்ய வேண்டும். இந்திய மக்கள் நீங்கள் யார் என்பதைப் பொருத்தே உங்களை மதிப்பீடு செய்வார்கள்" என்றார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் பிரச்சினையை நீதிமன்றம் வாயிலாக அணுகாமல் சாவர்க்கர் பற்றியும் மகாபாரதம் பற்றியும் பேசுவது ஏன் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கேள்வி எழுப்பியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு