ஹாங்காங்: சார்ஸ் பாதிப்பு குறித்து உலகறிய செய்தச் சீன மருத்துவர் ஜியாங் யான்யோங் காலமானார். அவருக்கு வயது 91. அவரது மறைவை சீன தேச ஊடகங்கள் மற்றும் அவரது நண்பர்கள் உறுதி செய்துள்ளனர்.
2003-ல் சார்ஸ் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது சீனாவில் சார்ஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என சொல்லி இருந்தார் அப்போதைய சீன சுகாதாரத் துறை அமைச்சர். அதை கேட்டு பதறிய மருத்துவர் ஜியாங் யான்யோங், தனக்கு தெரிந்தே சார்ஸ் பாதிப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தனி வார்டில் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்திருந்தார். அது குறித்து சீன ஊடகங்களுக்கு கடிதம் எழுதினார். ஆனால், அந்த தகவலை சீன தேச ஊடகங்கள் அப்போது புறக்கணித்தன. இருந்தபோதும் அந்த கடிதத்தின் தகவல் சர்வதேச ஊடகத்தின் வசம் கசிந்தது. அதன் வழியே உலகம் சார்ஸ் குறித்து அறிந்து கொண்டது. அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் தகவல்.
சார்ஸ் பாதிப்பு குறித்து உலகறிய செய்த சீன மருத்துவர் ஜியாங் யான்யோங் காலமானார். அவருக்கு வயது 91. அவரது மறைவை சீன தேச ஊடகங்கள் மற்றும் அவரது நண்பர்கள் உறுதி செய்துள்ளனர்.
Author: செய்திப்பிரிவு