புதுடெல்லி: குஜராத்தில் ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று சென்னையில் வெளியிடுகிறார். அப்போது இதற்கான இணைய தளத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.
உ.பி.யின் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்றது. அதுபோன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’, ஏப்ரல் 14 முதல் 24-ம் தேதி வரையில் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பை மத்திய சுகாதாரம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண் டவியா இன்று சென்னையில் வெளியிடுகிறார். இத்துடன் சங்கமத்திற்காக ஒரு இணைய தளத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். குஜராத்தை சேர்ந்த இவர் அங்கிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்.
குஜராத்தில் ‘சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம்’ 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று சென்னையில் வெளியிடுகிறார். அப்போது இதற்கான இணைய தளத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.
Author: ஆர்.ஷபிமுன்னா