மும்பை: அண்மையில் ஸ்வீட் கார்ன் விற்பனையாளர் ஒருவர் தன் கைவசம் இருக்கும் கரண்டி மற்றும் பக்கத்தில் இருந்த பாத்திரங்களை கொண்டு தாளம் வாசித்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ இணையவெளியில் வைரலாகி உள்ளது. இது தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதை பகிர்ந்து, அந்த சோள விற்பனையாளரை அவர் புகழ்ந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் ஆனந்த் மஹிந்திரா. அவரது சோஷியல் மீடியா ஷேரிங் அனைத்தும் அமளி துமளி ரகங்களாக இருக்கும். கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு வாழ்த்துவது, சமயங்களில் அதனை வடிவமைத்தவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் அவரது வழக்கம். அதோடு நின்று விடாமல் கவனம் ஈர்க்கும் வகையிலான பதிவுகளையும் பகிர்வார்.
அண்மையில் ஸ்வீட் கார்ன் விற்பனையாளர் ஒருவர் தன் கைவசம் இருக்கும் கரண்டி மற்றும் பக்கத்தில் இருந்த பாத்திரங்களை கொண்டு தாளம் வாசித்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ இணையவெளியில் வைரலாகி உள்ளது. இது தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதை பகிர்ந்து, அந்த சோள விற்பனையாளரை அவர் புகழ்ந்துள்ளார்.
Authour: செய்திப்பிரிவு