சென்னை: "சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியையும் இலக்குகளாகக் கொண்டு அனைத்து நலத்திட்டங்களும் வகுக்கப்பட்டன. இத்திட்டங்களின் அடிப்படையில், இந்தாண்டு நாங்கள் எய்த விரும்பிய இலக்குகளில், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளோம்" என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசின் 2வது முழுமையான பட்ஜெட். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்தார்.
சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியையும் இலக்குகளாகக் கொண்டு அனைத்து நலத்திட்டங்களும் வகுக்கப்பட்டன என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு