சென்னை: பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட எல்.இளையபெருமாளுக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கு அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இளையபெருமாள் முயற்சியால்தான் சிதம்பரத்தில் இரட்டைப் பானை முறை முடிவுக்கு வந்தது என்பதைப் பேரவையில் முதல்வர் நினைவுகூர்ந்தார். அவரது நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 1924 ஆம் ஆண்டு ஜுன் 26 ஆம் தேதி பிறந்தவர் எல்.இளையபெருமாள்.பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட அவர், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர் என்ற பெருமையை பெற்றவர்.
சமூகப் போராளி இளையபெருமாளுக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கு அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
Author: செய்திப்பிரிவு