கோவை/பொள்ளாச்சி: வாயில் காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த யானை உயிரிழப்புக்கு அவுட்டுகாய் (நாட்டு வெடி) வெடித்ததே காரணம் என தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆதிமாதையனூர் பகுதியில், வாயில் காயமடைந்த நிலையில் சுற்றித் திரிந்த பெண் யானையை பிடித்து, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உலாந்தி வனச்சரகத்திலுள்ள வரகளியாறு முகாமுக்கு கொண்டு சென்று, வன கால்நடை மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு யானை உயிரிழந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் கூறும்போது, “அவுட்டுகாய் வெடித்து யானை உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், காரமடை வனச்சரகத்தில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு