கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் நேற்று ஈடுபடுத்தப்பட்டது.
கோவை ஆலாந்துறை ஊராட்சிக்குட்பட்ட நாதே கவுண்டன்புதூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 11-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. கடந்த 6 நாட்களாக முழுமையாக அணையாமல், தீ தொடர்ந்து பரவியதால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் நேற்று ஈடுபடுத்தப்பட்டது. இதுதவிர, வனப் பணியாளர்கள், தீயணைப்புத் துறையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, தீயை கட்டுப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர் நேற்று ஈடுபடுத்தப்பட்டது.
Author: செய்திப்பிரிவு