Advertisement
கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சு சம்பவத்தை தொடர்ந்து நுழைவு வாயிலில் சோதனைக்கு பின்பே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக வந்த கவிதா என்ற பெண் மீது அவரது கணவர் நேற்றுமுன்தினம் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் போலீஸார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரதான நுழைவுவாயிலில் நுழையும் முன், யார் எதற்காக வருகிறார்கள் என விசாரித்து, அவர்கள் கொண்டு வரும் பைகளை சோதனையிட்டபிறகே நீதிமன்ற வளாகத்துக்குள் போலீஸார் அனுமதித்தனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement