கோவை: ‘பறையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், சலங்கை ஆட்டம், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், சித்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி, நாட்டு மாடுகள் கண்காட்சி’ என பல்வேறு அம்சங்களுடன் ‘தமிழ் தெம்பு – தமிழ் மண் திருவிழா’ கோவை ஈஷா யோகா மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ் மண்ணின் வாழ்வியலுடன் தொடர்புடைய அம்சங்களை கொண்டாட்டங்களின் மூலம் புதுப்பிக்கவும், புத்துணர்வூட்டவும் இவ்விழா மஹாசிவராத்திரியை தொடர்ந்து ஒரு வாரம் கொண்டாடப்பட்டது. தினமும் மாலை வேளையில், ஆதியோகி சிலை முன்பு வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த நாட்டுப்புற கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
‘பறையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், சலங்கை ஆட்டம், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், சித்த மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி, நாட்டு மாடுகள் கண்காட்சி’ என பல்வேறு அம்சங்களுடன் ‘தமிழ் தெம்பு – தமிழ் மண் திருவிழா’ கோவை ஈஷா யோகா மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது
Authour: செய்திப்பிரிவு